அழகான கண் இமைகளுக்கு இதை பண்ணுங்க…
ஐஸ்கிரீம் செய்யும்போது பயன்படுத்தும் ஜெலட்டினை சுடுநீரில் போட்ட சில நிமிடங்களுக்கு ஊற வைத்தால் அது ஜெல் போல மாறிவிடும். பின் அதில் 10 கிராம் ஜெல்லை எடுத்து அத்துடன் 10 கிராம் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து ப்ரிஜ்ஜில் வைத்து அன்றாடம் கண் இமைகளில் தடவி வர கண் இமைகள் அழகாக வளரும்.
கண் இமைகள் அடர்த்தியாக வளர அன்றாடம் ஒரு பஞ்சில் கிரீன் டீ ஊற வைத்து கண் இமைகளில் ஒத்தி எடுக்க கண் இமை அடர்த்தியாக வளரும்.
இரவில் தூங்கும் முன் ஆலிவ் ஆயில் , பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவற்றை சிறிது எடுத்து கண் இமைகளில் தடவி மசாஜ் செய்து வர கண் இமை நன்றாக வளரும்.
கண் இமையின் மேல் தோல் சுருக்கம் மற்றும் கருமை ஏற்ப்பட்டால் அடிக்கடி மஸ்காரா, ஐலைனர், ஐஷாடோ ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கண் இமைகளில் ஆலோவேரா ஜெல்லை சிறிதளவு தடவி வரலாம்.
இரவு படுக்கப்போகும் முன் விளக்கெண்ணையை சிறிது எடுத்து கண் இமைகளில் தடவி வந்தால் முடி நன்றாக அழகாக வளரும்.
கண்கள் ரிலாக்ஸாக வைத்திருக்க குளிர்ந்த நீரில் பஞ்சை நனைத்து கண்களில் சிறிது நேரம் வைத்திருக்கலாம்.