இந்தியாவை பாதுகாக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்துள்ளோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பையில் நாளை முதல் 2 நாட்களுக்கு இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மும்பையில் தேசியவாத காங். தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உ த்தவ் தாக்கரே கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய உத்தவ் தாக்கரே,
மோடி தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டவே ஒன்று சேர்ந்துள்ளோம் என்றார். ஆலோசனையில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து வரும் தலைவர்களுக்கு நாளை உத்தவ் தாக்கரே விருந்தளிக்கிறார்.கூட்டணியில் நாங்களும் இணைய உள்ளதாகவும், நாளை மும்பை வரும் தலைவர்களுக்கு எனது இல்லத்தில் விருந்து அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.