மயிலாடுதுறை மாணவர்களுக்கு ஒரு ஹாப்பி நியுஸ்..!!
மயிலாடுதுறை அருகே கிராமப்புற ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணல்மேட்டில் கிராமப்புற மாணவ மாணவிகள் அரசுத் தேர்வு எழுதி வெற்றி பெற்று பயனடையும் வகையில் இலவச ஐஏஎஸ் அகாடமி இன்று திறக்கப்பட்டது.
சின்னம்மாள் சாமிநாதன் கல்வி அறக்கட்டளை சார்பில் திறக்கப்பட்ட இந்த சுவாமி ஐ ஏ எஸ் அகாடமி மூலமாக ஆண்டுதோறும் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள 60 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து கல்வியாளர்கள் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி அளிக்க உள்ளனர். இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்பு உறுப்பினர் சுவாமிநாதன் தேவதாஸ் இந்த ஐஏஎஸ் அகாடமியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற எட்டாக்கனியாக இருந்த போட்டி தேர்வுகள் கைக்கெட்டும் தூரத்தில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post