ரஷ்யாவில் இராணுவ விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் செவா்னி விமான தளத்திலிருந்து 8 விமானப் பணியாளா்கள் 7 பயணிகளுடன் ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்ததால் தரையிறங்க முயற்சி செய்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இவோனாவோ பகுதியில் இந்த ராணுவ சரக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது, என்ஜினில் தீப்பிடித்ததால், கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் 15 பேர் பயணம் செய்ததாகவும் ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தீப்பற்றி எரிந்தபடி விமானம் கீழே விழும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..