15 கோடியே 02 லட்சம் ரூபாய் பறிமுதல்..!!ராதாகிருஷ்ணன் கொடுத்த அப்டேட்..!!
15 கோடியே 02 லட்சம் ரூபாய் பறக்கும் படையினராலும் 20.53 லட்சம் ரூபாய் வருமானவரி துறையினராலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 29. 04 லட்சம் பூத் ஸ்லீப் வழங்கபட்டுள்ளது. 1175 காவல்துறை அதிகாரிகள் தபால் வாக்களித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தினை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சியினையும் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்
ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் பணிகள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று வருகிறது. 769 வாக்கு சாவடிகளுக்கான 923 நுண் பார்வையாளர்களைக் நியமித்து உள்ளோம். அவர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.
100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
19,400 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 18,000க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் இந்த தேர்தலுக்காக பணியாற்றுகின்றனர்.
மக்கள் ஓட்டு போடுவது. மக்களை அதை கடமை என்று நினைத்து செய்யவேண்டும். 39.25 லட்சம் பூத் ஸ்லிபில் ( voter’s information slip) 29. 04 லட்சம் ஸ்லீப் வழங்கபட்டுள்ளது. இன்னும் 12 லட்சம் வரை கொடுக்க வேண்டும்.
காவல்துறையினரை பொறுத்தவரை 1175 பேர் தபால் வாக்களித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி 13 தேதியுடன் முடிவடைகிறது.
15 கோடியே 02 லட்சம் பணம் இதுவரை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரிதுறையினர் 20.53 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று இரவோடு முடிந்துவிடும்.
மத்திய சென்னையில் ஒரு முதியவர் தான் இந்த கட்சிக்கு தான் தபால் வாக்கு செலுத்தியதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்த விவகாரம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..