ADVERTISEMENT
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவில் இறகு பந்து போட்டி!!
மயிலாடுதுறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.
ஆடவர் இரட்டையர் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 60 அணிகளை சேர்ந்த 120 பேர் கலந்து கொண்டு விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் விருது மற்றும் ரொக்க பரிசினை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.