வடகிழக்கு பருவமழை மயிலாடுதுறை சீர்காழியில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
பருவமழை தீவிரம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சீர்காழியில் கனமழை பெய்து வெள்ளத்தால் மூழ்கியது. வெள்ளத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.1000 வழங்க அரசாணை வெளியீட்டுள்ளது.
இதற்கான நிவாரண நிதியாக 16 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீட்டது தமிழக அரசு. இதை தொடர்ந்து
சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் உள்ள 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு.