நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு செய்தி சேகரிப்பதற்காக வந்த தனியார் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் வாரிசு படப்பிடிப்பை ட்ரொன் கேமரா மூலம் படப்பிடித்ததாகவும் அதற்கு படக்குழு அவரை தாக்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் யானைகளை கொண்டு அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகின. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார் அங்கு அவர் ட்ரொன் கேமெராவை கொண்டு வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை படப்பிடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து படப்பிடிப்பின் ஊழியர்கள் அந்த செய்தியாளர் மற்றும் கேமெராமேனை தாக்கி அவர்களின் கேமெராவை பறித்து கொண்டதாகவும் தெரிவித்தனர், இதைதொடர்ந்து இரு தரப்பினரையும் நசரத்பேட்டை காவல்துறைக்கு போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் படக்குழுவினர் தங்களை தாக்கியதாக புகார் அளித்தனர் அதை தொடர்ந்து வாரிசு படப்பிடிப்பை ட்ரொன் கேமரா மூலம் படப்பிடிப்பை படம்பிடித்ததாக படக்குழுவினர் புகார் அளித்தனர். இரு தரப்பினரின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.