உங்க அக்கவுண்ட்டில் இன்னும் 1000ரூ வரலையா..? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்..!!
புதிய ரேஷன்கார்டுகளை பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில் இதுகுறித்து தமிழக அரசு பல விதமான நடவடிக்கை எடுக்க போகிறது என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது..
தேர்தல் வாக்குறுதியில் சொன்னது படி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமலுக்கு கொண்டுவந்தனர்.., “தகுதியுடையவர்களுக்கு உரிமைதொகை“ என்ற தலைப்பு கொண்டு வரப்பட்டதால் அதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரமித்தனர்..
இன்னும் பலருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என பல மகளிர் குரல் கொடுத்து வருகின்றனர்.. அந்த சமையத்தில் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன..
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களில் அதற்கு தகுதியுடைய மகளிர் இருந்தால் மேல் முறையீடு செய்ய முடியும்.., அப்படி செய்தால் உங்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்..
அதன் பெயரில் இதுவரை 7 லட்சம் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு.., மகளிர் உரிமைதொகை வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது..
புதிய ரேஷன்கார்டு :
மேலும் புதிய ரேஷன்கார்டு அப்பளை செய்து பெற்றுள்ளவர்கள் மகளிர் உரிமைதொகை திட்டத்தில் விண்ணப்பித்து.., பயன் பெறலாம்.., அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என அரசு தெரிவித்துள்ளது..