இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளாதவது, “150 பேர் வரையிலான எண்ணிக்கையில் ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும் பணியாளர்கள் பணிபுரிந்தால், அந்த இடங்களில் ஒரு முதலுதவி பெட்டியை வைக்க வேண்டும். இந்த பெட்டியை உரிய முறையில் பராமப்பதுடன், முறையாக கையாள வேண்டும். தனித்து தெரியும் வகையில் மாட்டியிருக்க வேண்டும்.
சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில், அனைத்து மருந்துகளும், மருத்துவ கருவிகளும், முதலுதவி பெட்டியில் இடம்பெற்றிருக்க வேண்டும். அந்த முதலுதவி பெட்டியில் சாதாரண காய்ச்சல், சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் படியான அனைத்து மருந்துகளும் இருக்க வேண்டும். பொதுவான அனைத்து மருந்து மாத்திரைகளை எப்பொழுதும் இருப்பில் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசு விரைவு பஸ்களில், முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி மாதம், முதலுதவிக்கான பொருட்கள் வழங்கும் முறையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சில மாற்றங்களை செய்திருந்தது.அதாவது, டிஞ்சர், பிளாஸ்டர், பொட்டாசியம் பெர்மாங்கனேட், அயோடின், பஞ்சு உள்ளிட்ட மருத்துவ உதவி பொருட்கள் அந்த முதலுதவி பெட்டியில் உள்ளன.. பயணியருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால், இந்த மருந்து பொருட்களை பயன்படுத்தி முதலுதவி செய்யலாம்.
ஆனால், பெரும்பாலான பேருந்துகளில், முதலுதவி பெட்டிகள் காலியாகவே இருப்பதாகவும், இதுகுறித்து புகார்கள் அதிகம் வந்ததாலும், முதலுதவி பெட்டிக்கான பொருட்களை, நடத்துனர்களின் பொறுப்பில் எடுத்துச் செல்ல உத்தரவிடப்பட்டது. ஷிப்ட் முடிந்து கேஷ் கவுண்டரில் கணக்கு முடிக்கும்போது, இந்த பொருட்களையும் ஒப்படைத்து, அடுத்த ஷிப்ட் நடத்துனரிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.. இந்த நடைமுறைதான் இப்போது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.