வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா..!! போக்குவரத்து துறை வெளியிலிட்ட அதிரடி அறிக்கை..!!
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது.
வேளாங்கண்ணி மாதாவின் பிறந்தநாள் பெருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அதற்கு முன் கொடியேற்றமானது ஆகஸ்ட் 29 தேதி தொடங்கிவிடும். பேராலயத்தில் இருந்து தொடங்கும் இந்த கொடி ஊர்வலமானது, லட்சக்கணக்கான பக்தர்கள் இடையில் கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத்தெரு வழியாக மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் ஊர்வலமாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும். அதன் பின் மாதா உருவம் பொறித்த கொடியை கொடிமரத்தில் ஏற்றிய பின் அந்த தேவி மழையாக பெய்து பக்தர்களை ஆசீர்வாதம் செய்வாள் என்பது ஐதீகம்.
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவிற்கு ஆண்டு தோறும் சிறப்பு பேருந்துகள் மற்றும் இரயில்கள் இயக்கப்படும்.. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது..
ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு மொத்தம் 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
மேலும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. வேளாங்கண்ணியில் இருந்து திரும்பி பயணிகளின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும் வகையில் ஏற்பாடுகள் செய்துகொடுக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..