ரஷ்ய அரசுக்கு எதிராக திரும்பி உள்ள வாக்னர் எனப்படும் தனியார் ராணுவக் குழு, தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் உள்பட 10 பேர் விமான விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்ய பாதுகாப்பு படையினருடன் இணைந்து ‘வாக்னர் ‘ எனப்படும் தனியார் ராணுவ குழுவும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால், இந்த குழுவினர் தற்போது ரஷ்யாவிற்கு எதிராக திரும்பி உள்ளனர்.
பெரிய ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் இந்த குழு, தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் தலைமையில் கடந்த ஜூன் மாதம் விமானத் தளம் உள்ளிட்ட ராணுவ நிலைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து புடினுக்கு அதிர்ச்சி தந்தது.
இக்குழுவை வழி நடத்தி புரட்சி செய்த வாக்னர் குழு தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் மற்றும் 9 பேர் விமான டிவெர் மாகாணத்தில் விமான விபத்தில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு உண்மையில் ரஷ்யா நாடு பிண்ணனியில் இருக்கும் என்பது வெளிநாட்டு ஊடகங்களின் யூகமாக உள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.