தீபாவளிக்கு ஆவின் பொருள்களின் விற்பனையை 25 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பால்வளத்துறை அமைச்சர்
த.மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில், நடப்பாண்டு நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “பால் நிலுவைத் தொகை முற்றிலும் வழங்கப்பட்டுள்ளது”. “10 நாட்களுக்குள் பால் பட்டுவாடா பணம் வழங்கப்படுகிறது”.
“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25 சதவீதம் இனிப்பு உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.”ஆவின் ஐஸ்கிரீம், பால்கோவா உலக தரத்துடன் தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.