ஜெயிலர் படத்திற்கு தடை..! உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு என்ன..?
ஜெயிலர் படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ளது.., தமிழில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையில் வெளியானது. இந்த 9 நாட்களில் மட்டும் ஜெயிலர் படம் 400 கோடி வசூலை அள்ளிவிட்டது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது,.
இந்நிலையில் இந்த படத்திற்கு வழங்கப்பட்ட யு/ஏ சான்றிதழை ரத்து செய்து, படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் படக்குழுவினர் இடமும், ரசிகர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘ஜெயிலர்’ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால், ஜெயிலர் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். விரைவில் இந்த மனு மீதான விசாரணை அமலுக்கு வரும் உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
Discussion about this post