அரியலூர் மணிப்பூர் மத்திய அரசை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..!!
தற்போது மணிப்பூரில் பா.ஜா.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது, என். பைரோன் சிங் முதலமைச்சராக உள்ளார். அவர் மெய்த்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர். பா.ஜா.க -32, காங்கிரசு-5, ஜெ.டி.யூ.-6, நாகாலாந்து மக்கள் முன்னணி (N.P.F.)-7, மற்றவர்கள் 10 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
மெய்த்தேயி வகுப்பைச் சார்ந்த சிலர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வழக்குத் தொடுத்தனர்.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி.முரளிதரன் மெய்த்தேயி வகுப்பு மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரை செய்து நான்கு வாரங்களுக்குள் ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டுமென உத்தர விட்டார்.
இதனால் மலைவாழ் பழங்குடியினரான குக்கி-சோமி, நாகா இன பழங்குடி மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று அச்சமடைந்தனர். மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பழங்குடிகளின் தலைவர் தின்காங்க் லூங்க் காங்க்மேய் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி முரளிதரன், பழங்குடி தலைவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடுத்து அவரை நீதிமன்றத்தில் நேர் நிறுத்த மாநிலக் காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டார்.
மலைவாழ் பழங்குடியினரின் உரிமையைப் பாது காப்பதற்காக 3.5.2023 அன்று மணிப்பூர் அனைத்துப் பழங்குடி இட மாணவர் கூட்டமைப்பு (All Tribal Students’ Union Manipur) (ATSUM) சார்பில் மலைவாழ் பழங்குடி யினரின் ஒற்றுமைப் பேரணியை எட்டு மலை மாவட்டங்களில் நடத்தினர். பா.ஜ.க ஆட்சியின் ஆதரவோடு மெய்த்தேயி குழுவினர் பழங்குடி மக்கள் மீது மிகப்பெரியத் தாக்குலை நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையில் மிகப்பெரிய வன்முறை மூண்டது.
இந்நிலையில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த வஞ்ச நெஞ்சம் கொண்ட இளைஞர்கள் குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.., அதுமட்டுமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஆளாக்கப்பட்ட பெண் என் மனைவி தான் என்று ராணுவ வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். நாட்டிற்காக எங்கள் உயிரை பணைய வைத்து நாங்கள் இங்கு இருக்கிறோம். ஆனால் எங்கள் வீட்டிற்கே பாதுகாப்பு இல்லை என்ற கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
பெண்களை நிர்வாணமாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆங்காங்கே.., மணிப்பூர் பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தற்போது அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசு கண்டித்தும் கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் அரசியல் லாபத்திற்காக இருதரப்பு மக்களிடையே கலவரத்தை உண்டாக்கும் வகையில் செயல்பட்ட மாநில பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி மற்றும் தொண்டரணியை சேர்ந்த ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டனர்.