கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி யுவராஜ் மதுரை மத்திய சிறையில் இருந்து கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, முதலாவது குற்றவாளி யுவராஜ்-க்கு 3 ஆயுள் சிறை தண்டனை, சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் 2வது குற்றவாளியான யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.