பாலியல் வழக்கு.. தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனைகள்..
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநராக இருப்பவர் பழனிசாமி. இவர், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஆசிரியர்களின் பாதுகாப்பின்றி எந்தவொரு அமைப்பு சார்பாகவும் மாணவ, மாணவியர்களை முகாம்களில் ஈடுபடுத்தக்கூடாது. மேலும், பயிலும் பள்ளியிலோ அல்லது வெளியிடங்களிலோ முகாம் நடத்தப்பட வேண்டியிருப்பின், ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பொற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறப்பட்டு அதன் பிறகே மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மேலும், பெற்றோர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதியின்றி மாணவ, மாணவியரை முகாம்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதை அனைத்துப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் இந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்