ஜம்முகாஷ்மீர் பஹால்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். தீவிரவாதிகளுக்கு உதவியதாக உள்ளுரை சேர்ந்த பலரிடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், குல்காம் பகுதியை சேர்ந்த இம்தியாஸ் அகமது என்ற 23 வயது இளைஞர் தீவிரவாதிகள் தங்க உணவும் இடமும் கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து,அவரை பிடிக்க போலீசார் பிடித்து விசாரித்தனர். தீவிரவாதிகளுக்கு உதவியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தீவிரவாதிகளுக்கு உதவிய விதம் குறித்து போலீசாருக்கு நடித்து காட்டிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் முகமது இம்தியாஸ் அங்குள்ள ஆற்றில் குதித்துள்ளார். நீந்த முயற்சித்தாலும் முடியவில்லை. நீரோட்டத் அதிகமாக இருக்கவே, வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்டு பலியானார்.
இதையடுத்து, முகமது இம்தியாசின் குடும்பத்தினர் பாதுகாப்புப் படையினர் அவரை அடித்துக் கொன்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தியும் இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இந்த தகவலை ராணுவம் மறுத்துள்ளது. அதோடு, இளைஞர் ஆற்றில் குதித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது.