உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பயணிகள் நிழற்குடையை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் மதிமுக 20 வது வார்டு மாமனன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உணவகத்தில் உணவு சாப்பிட்ட காவல் ஆய்வாளர் காவேரியிடம் நிலுவை பணம் கேட்ட உரிமையாளரை, காலில் உள்ள சூவை கழட்டி அடிக்க சென்ற சிசிடி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவலர் சீருடையில், இருக்கும் ஒருவர், ஓட்டல் உரிமையாளிடம் வாக்குவாதம் செய்து, பணத்தை வீசிவிட்டு, காலில் இருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சம்பவம் பெரும் பொதுமக்கள் மத்தியில் அச்சதை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில், பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைக்கு, பிறவியிலேயே இருதய குறைபாடு இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மருத்துவ சிகிச்சை செய்ய, கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் நவீன இயந்திரங்கள் இருப்பதால், கோவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டரை மணி நேரத்தில் குழந்தை பாதுகாப்பாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.