உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம் :
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் லோடுமேன்கள் தவறு செய்வதாக புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்து அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த ஒரு ஆண்டாக திருக்கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் மேலே, மலைக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் செங்கல், மணல், எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் கழுதைகள் மூலம், மேலே, கொண்டு சென்று பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மிக்சாம்புயல் காரணமாக சுமார் 5000 ஏக்கருக்கு மேல் நல்லவிளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்தது. இப்பகுதியில் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை என தற்போது ஆங்காங்கே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருப்பூர் காங்கேயம் சாலை நல்லூர் காஞ்சிநகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மகாகணபதி ஆலயம் உள்ளது. இதில் ராமமூர்த்தி, கோவில் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள அப்பகுதி சேர்ந்த 4 பேரை நியமித்தனர். இதற்கிடையே கோவில் கணக்கினை சரி பார்த்தபோது கோவில் பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரிவந்ததை அடுத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
விருதுநகர் சீதக்காதி தெருவை சேர்ந்த அகமது என்பவரின் இருசக்கர வாகன ஒர்க் ஷாப்பில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 14 இருசக்கர வாகனம் மற்றும் 5 ஜெனரேட்டர்கள் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து விருதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.