சீட்டு பணத்தை தரவில்லை என்றால்..!! கொலை மிரட்டல் விடுத்த அரசியல் பிரமுகர்..!! கண்ணீருடன் பெண் புகார்..!!
தருமபுரி அருகே மாதத் தவணை சீட்டு தொகையை மொத்தமாக கட்டச் சொல்லி குடும்பத்து பெண்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கபட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க புகார் மனு
தருமபுரி அடுத்த குளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி சரோஜா இவர்களுக்கு 1 மகன் 3 மகள்கள் உள்ளனர். கணவன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் ஒன்பது வருடத்திற்கு முன்பு மகனும் இறந்து விட்டார். இந்நிலையில் இளைய மகள் மஞ்சுளா தனது கணவருடன் கர்நாடகா மாநிலத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்து வருகின்றனர். 2 பெண் பிள்ளைகளும் பாட்டியின் பாதுகாப்பில் குளியனூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஞானசேகரன் நான்கரை லட்சம் ரூபாயிக்கான மாதத்தவனை சீட்டு நடத்தி வந்துள்ளார். அதில் 36பேர் உறுபினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.. அந்த தவணை சீட்டில் சரோஜாவும் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் சரோஜா மாதத்தவனை சீட்டு 17 வது சீட்டாக எடுத்துள்ளார். இவரிடம் நாலரை லட்சம் ரூபாயில் ஏலத்தொகையில் 2 லட்சத்தி 5 ஆயிரம் கொடுத்துள்ளனர்.
சரோஜா 22 மாதங்கள் சீட்டு கட்டி வந்த நிலையில் திடீரென ஞானசேகரன் சீட்டு நடத்துவதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் மாதத் தவணை கட்ட வேண்டிய மொத்த தொகையையும் கட்டச் சொல்லி ஞானசேகரன் வற்புறுத்தி உள்ளார். மாதத்தவனை சீட்டு என்பதால் மாத மாதம் தான் கட்ட முடியும். ஒரே தவணையாக என்னால் கட்ட முடியாது நான் கூலி வேலை செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மொத்த சீட்டு பணத்தையும் கட்டச் சொல்லி ஞானசேகரின், மனைவி ராஜேஸ்வரி, மகன் விமலன், இவரது மனைவி துளசி மற்றும் பத்மாவதி ஆகியோர் சரோஜாவின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளனர். என்னால் ஒரே தவணையாக பணத்தைக் கட்ட முடியாது மாத மாதம் தான் கொடுக்க முடியும் என தெரிவித்த போது 5 பேரும் சேர்ந்து சரோஜா குடும்பத்தினரை தகாத வார்த்தையால் திட்டியும் கல்லூரிக்கு செல்லும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் சரோஜாவை கீழே தள்ளி தாக்கிய நிலையில் வீட்டு ஜன்னல் கண்ணாடி மற்றும் வீட்டில் உள்ள உடைமைகளை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் ஆண் துணை இல்லாத வீட்டில் பாட்டி மற்றும் பேத்திகளுக்கு 5 பேரும் மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது சம்பந்தமாக சரோஜா மதிகோன் பாளையம் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளார்.
ஞானசேகரன் கட்சி பிரமுகர் என்பதால் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினர் முன் வராததால் நேற்று சரோஜா தன்னுடைய குடும்பத்துடன் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.. ஏலச்சீட்டு நடத்தி மாத தவணை தொகை முழுவதும் உடனடியாக கட்ட சொல்லி வீட்டிற்கு சென்று பெண்களை தாக்கி வீட்டில் உள்ள உடமைகளை தாக்கும் வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..