உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க நுழைவு வாயில் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு நிரந்தர பணி வழங்கி, சரியான ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதாலும் காற்று வீசி வருவதாலும் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாகியுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் மாதம் துவங்க உள்ள நிலையில் இன்னும் நான்கு வாரங்கள் உப்பு உற்பத்தி நடைபெறும் எனவும் இதனால் உப்பு ஒரு டன் 2500 முதல் 2800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் வனப்பகுதியில் உள்ள பச்சையம்மன் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ விழா நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு மகாராணி ரூபம் அலங்ககரிக்கப்பட்ட பிறகு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
வேலூர் மாவட்டம்,தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியl கல்லூரியில் மகளிர் மேம்பாடு மற்றும் ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி திறந்து வைத்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழுகளின் ஆடைகள்,கைவினை பொருட்கள் உள்ளிட்டவைகளை கல்லூரி மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பார்வையிட்டு ஆர்வமுடன் வாங்கி சென்றனர்…