உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவைக்கு இரவு 7.05 க்கு தனியார் பேருந்தும், 7.10க்கு அரசு பேருந்தும் இயங்கி வந்த நிலையில் தாமதமாக வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தை மறித்து பயணிகளை ஏற்றியது. இதனால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் பாலாஜி தனியார் பேருந்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.. இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த நேரக் காப்பாளர்கள் தனியார் பேருந்தை அப்புறப்படுத்தி அரசு பேருந்தை அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் வசித்து வரும் பொன்னுசாமி என்பவரின் 35 செம்மறி ஆடுகளை தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடிக்க முயன்றுள்ளது. இதில் நாய்களிடமிருந்து தப்பித்து ஓடிய செம்மறி ஆடுகள் அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் ஆடுகளை மீட்டனர் .மேலும் அதிகமாக தண்னீரை குடித்ததால் 16 ஆடுகள் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று கார் அரசு பேருந்து மீது ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனத்தில் சென்ற நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை தொடந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாலை ஓரமாக நிறுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 21 இடங்களில் திமுக சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் வாரியாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. தாரணி சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சியில் மாடுகள் சுற்றித் திரிவதாக வந்த புகாரையடுத்து மாடுகளைப் பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளின் வாகனத்தை மறித்த மாற்றுத்திறனாளி முதியவர் முத்தையா மாடுகளைப் பிடிக்கக் கூடாது என்று உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.