“ஜனநாயகத்தில் ஒளி ஏற்றுபவர்” தளபதி 69 போஸ்டரும்.. தேமுதிக கட்சிக் கொடியும்..
தளபதி விஜய் 69ன் படத்தின் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானதை தொடர்ந்து.. இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. அதே சமயம் ஒரு சர்ச்சையும் வெடித்துள்ளது..
தளபதி விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையில்., கேவிஎன் புரொடெக்ஷன் தயாரிப்பில் வெங்கட் நாராயணா படத்தை தயாரிக்கிறார்.
அரசியலில் கால் பதித்துள்ள தளபதி விஜய்., முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் தளபதி 69 அவரின் கடைசி படம் என்பதால் மக்கள் மனதில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது..
நேற்று மாலை 5 மணிக்கு கேவிஎன் புரொடெக்ஷன் “ஒன் லாஸ்ட் டைம்” என்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தது.. அதில் அவர் ஆரம்ப சினிமா வாழ்க்கையில் இருந்து தற்போதைய ரசிகர் கூட்டம் வரை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டிருந்தது அது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியது என சொல்லலாம்..
அதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தது.. அந்த போஸ்டரில், நீல வண்ண பின்னணியில், கையில் தீப்பந்தம் ஏந்தியிருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதில், “ஜனநாயகத்தில் ஒளி ஏற்றுபவர்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் படம் அரசியல் தன்மை கொண்ட படமாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது.
இந்த படத்தில் சிம்ரன் நடிக்கவுள்ளதாகவும் மற்ற நடிகர்களின் பெயர்களை விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது..
மேலும், இந்தி நடிகர் பாபி தியோல் விஜய்க்கு வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக கொடி :
இந்நிலையில் படத்தின் முதல் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து போஸ்டரில் குறிப்பிட்டுள்ள கை ஒங்கிய படமானது தேமுதிக கொடியின் நடுவே உள்ள கையை குறிப்பிட்டிருப்பதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்..