நீங்கள் தவற விட்ட சில முக்கிய செய்திகள் உங்கள் பார்வைக்காக..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து 2 தேக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியை ஆய்வு செய்ய வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஸ்ரீபாரதி பெண்கள் கலைக்கல்லூரியில் சுமார் 1500 மாணவிகள் ஓரே மாதிரியமான கேரள பாரம்பரிய உடை அணிந்தும் அத்தப்பூ கோலம் இட்டும் ஓணம்பண்டிகை நிகழ்ச்சியை விமரிசையாக கொண்டாடினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரபலதுணிக்கடை அருகே சிவசக்தி என்பவரின் இருசக்கர வாகனத்தை பட்ட பகலில் மர்ம நபர்கள் துணிச்சலாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து பூக்களின் வரத்து அதிகமானதால் விலை குறைந்ததாகவும் மேலும் அதிக அளவு வியாபாரமாகும் என எதிர்பார்த்த நிலையில் போதிய வியாபாரம் இல்லாததால் பூக்கள் தேக்கமடைந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று குரூப் 2 மற்றும் குரூப் 2A பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளை 29 தேர்வு மையங்களில் எட்டாயிரத்து 800 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரத்தினாசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனிடையே தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் துணை ஆட்சியர் தலைமையில் 2 பறக்கும் படை, 8 இயங்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று குரூப் -2 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 48 மையங்களில் பதிமூன்றா யிரத்து 139 பேர் தேர்வை எழுதினர்.இதனிடையே மாணவர்கள் தேர்வு எழுத செல்ல சிறப்பு பேருந்துகளும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..