உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
தர்மபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் ஏரிக்கரை சக்தி விநயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சக்தி மாரியம்மன் கங்கை பூஜை செய்யப்பட்டது, பின்னர் திரளான பக்தர்க்கள் பால்குடம், முளைப்பாரி ஏந்தி வீதிஉலா வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.
ராணிப்பேட்டை தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம ஊதியம், உணவு மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை நிர்வாகம் வழங்க வேண்டும் எனக் கோரி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டவந்தனர். இந்நிலையில் தற்போது தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து வந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், வேதமந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி இரயில்வே மேம்பாலம் அருகே அரசு பேருந்து ஒன்று திடீரென பழுதடைந்து நின்றதால், சித்தூர், கடலூர் தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை, படகு சவாரியை சுற்றியுள்ள இரும்பு வேலியை சீரமைத்து தரக்கோரியும், தண்ணீரை சுத்தம் செய்து தூய்மையாக மாற்றி தரவேண்டி அப்பகுதிமக்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.