உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
அரியலூர் மாவட்டம் இலையூர் தெற்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி என்பவருக்கு சொந்தமான மாடு ஒன்று கிணற்றில் விழுந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த பசுமாட்டினை மீட்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடிஅருகேவுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் தமிழரசி, மற்றும் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் நாகராஜன், மற்றும் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 16 மாணவர்களுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டு கடத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவ குழுவினர் அரசு பள்ளியில் முகாமிட்டு அனைத்து மாணவ மாணவிகளையும் தீவிர பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் காவல் துறையினர் பள்ளியிக்கு வருகை தந்து மாணவ மாணவியரும் ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் குருலிங்கா புரத்தைச் சேர்ந்த சீத்தாராம் மின்சார பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சாத்தூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளததால் ஆத்திரமடைந்த மக்கள் குடிநீர் வழங்க வேண்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் லாரிகளுக்கு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அச்சுலாரிகளை குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வாடகை நிர்ணயம் செய்வதில் பழையமுறையே கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால் ஊழியர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.