காசநோயால் வருடத்திற்கு இவ்வளவு பேர் பாதிப்பா..?
காசநோய் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் இதரபணியாளர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னையில் “உலக காசநோய் தினம் 2025″ நிகழ்ச்சியில் 100 நாட்கள் காசநோய் இல்லா தமிழ்நாடு தொடர் பிரச்சாரம் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழ்நாடு அதிக பரிசோதனை செய்ததற்காக ஒன்றிய அரசின் விருதினை பெற்றது.
இந்தியாவில் லட்சம் பேரில், 179பேர் காசநோயினால் பாதிக்கப்படுகிறார்கள், இதுவே தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 125பேர் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில், 2024ஆம் ஆண்டு 93,301பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 94சதவீதம் பேருக்கு மருந்து எதிர்ப்புத்திறனுக்கான UDST பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
காசநோய் இல்லா தமிழ்நாடு பிரச்சாரம் என்னும் திட்டம் டிசம்பர் 7முதல் மார்ச் 24வரை நடைபெற்றது. இதில் 48எக்ஸ்ரே வாகனங்கள் மூலமாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டு நோய் இருப்பது கண்டறியப்பட்டது அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். பிறகு காசநோய் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் இதரபணியாளர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கபட்டது.