தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷுக்கு 20 லட்சம் ஊக்கத்தொகை..!!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியின் கீழ் விளையாட்டு வீரர், வீராங்கனை இரண்டு நபர்களுக்கு மொத்தம் 5,50,000 க்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.3.2025) ‘Champions of Future’ அகாடமியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பைக்பந்தய வீரர் செல்வன். ரெஹான் கான் ரஷீத்க்கு தமிழ்நாடு சாம்பியன்அறக்கட்டளையின் மூலம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையைவழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதனைகளை படைத்து வரும் தடகள வீராங்கனை செல்வி. பி.எம். தபிதா அவர்களுக்கு, பயிற்சிக்கு தேவையான சாதனங்களை வாங்குவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் மூலம் 50 ஆயிரத்திற்கான காசோலையைவழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் செக் குடியரசின் தலைநகரான பிராக் (Prague) கில் பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 7 -ந் தேதி வரை நடைபெற்ற பிராக்செஸ் திருவிழா – 2025 ன் (The Prague Chess Festival – 2025) மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் தனது பெற்றோருடன் துணை முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..