இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, பாப்பாநாட்டை சேர்ந்தவர் 23 வயதாகும் பட்டதாரி பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்த ஊர் திரும்பிய அவரை அதே பகுதியை கவியரசன், திவாகர், பிரவின் மற்றும் 17வயது சிறுவன் ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு மகளிர் காவல் நிலையத்தில் கவியரசன் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கவியரசன் உட்பட 4 பேரை கைது செய்தனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த, பட்டுக்கோட்டை தலைமை அரசு மருத்துவருக்கு விளக்கம் கேட்டு ஒரத்தநாடு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதியாமலும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாக செயல்பட்ட, பாப்பாநாடு காவல் நிலைய பெண் எஸ்.ஐ. சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை பாப்பாநாடு காவல் உதவி ஆய்வாளர் சூர்யாவை தஞ்சை சரக டிஜிபி ஜியாவுல் ஹக் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து பாப்பாநாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள் என தங்களது கடையை அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும், என கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-பவானி கார்த்திக்