ரீல்ஸ் மோகத்தால் அந்தரத்தில் தொங்கிய இளம் பெண்…பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!
ஒவ்வொரு காலகட்டத்திலும், இள வயதை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாதிரியாக இருந்துள்ளனர்.
அந்த வகையில், தற்போது உள்ள இளைய தலைமுறையினர், ரீல்ஸ் வீடியோ எடுப்பதில் அதிக மோகம் கொண்டுள்ளனர்.
ரீல்ஸில் நல்ல பார்வையாளர்களை பெற வேண்டும் என்பதற்காக, எந்த ஒரு எல்லைக்கும் செல்ல பலர் தயாராக உள்ளனர்.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், புதிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், இரண்டு ஆணும் சேர்ந்து, விபரீத விளையாட்டை விளையாடியுள்ளனர்.
இன்னும் விளக்கமாக கூற வேண்டும் என்றால், ஒரு பழைய கட்டிடடத்தின் மேல்மாடிக்கு, அந்த 3 பேரும் சென்றுள்ளனர்.
அங்கு, அந்தபெண் கட்டிடத்தின் ஒரு பகுதியில், அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறார். இந்த பெண்ணை, 2 ஆண்களில் ஒருவர், கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கிறார்.
3-வதாக உள்ள நபர், இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தார்.
இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. பலரும், அந்த பெண்ணையும், 2 ஆண்களையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”