சானிடைசர், ஹேண்ட் வாஷ் வாங்க ஆதார் கார்டு கட்டாயம்… தமிழ்நாடு மருந்து விற்பனை சங்கம் அதிரடி அறிவிப்பு…!
சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்ததில் 51 பேர் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்குவதற்கும் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
குறிப்பாக சானிடைசர் வாங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆல்கஹால் மற்றும் எத்தனாலை மூலப்பொருளாக கொண்ட சானிடைசர், ஹேண்ட் வாஷ், ஸ்பிரிட் போன்ற பொருட்களை முறைப்படி விற்பனை செய்ய வேண்டும்.
இதனை தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
அதன்படி, விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
-பவானி கார்த்திக்