நான் கண்ட உலகம் நீ தானே..!! எழுத்து கிறுக்கச்சி கவிதை – 3
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.., என சொல்லுவாங்க காரணம் தெய்வத்திடம் கூட நம் வேண்டுதலை மனம் விட்டு வெளியே சொல்ல வேண்டும் ஆனால் தந்தையிடம் நாம் சொல்லாமலே நம் தேவைகளை புரிந்துக்கொள்ளுவார்கள்.
நம்மை உலகிற்கு கொண்டு வந்து நம்மை உயிராக பார்த்துக்கொள்ளும் தந்தைக்கு கவிதை இல்லை என்றால் எப்படி..?
அடி எடுத்து நான் நடக்கும் முன்னே
நான் தான் உலகமென்று
உன் தோளில் தூக்கி வைத்தாய்..
உன் அன்பு மகள் நான் தான் என ஊரை கூட்டி சொன்னாய்..,
அதற்காக ஒரு செல்ல பெயரும் எனக்கு வைத்தாய்..
நான் சொன்ன முதல் வார்த்தை “அப்பா”
என் மகள் பேசிவிட்டால் என்று பெருமை கொண்டாய்..
அந்த அன்பை தலையில் முத்தமிட்டு சொன்னாய்..
நான் மண்ணில் வந்த பின்
என் கண்ணில் கண்ணீர் வராமல் பார்த்துக்கொண்டாய்
நீ காணாத உலகத்தை நான் காண உனக்கு ஆசை…
ஆனால் நான் கண்ட உலகம் நீ தானே “அப்பா“
-லோகேஸ்வரி