நீ மீசை வச்ச ஆம்பள தான..!! சவுக்கு சங்கரை புரட்டி எடுத்த வீரலட்சுமி..!!
நீ மீசை வச்ச ஆம்பள தான, பொம்பளைங்கள ஏன் தப்பா பேசுற.. அப்படின்னு சவுக்கு சங்கரை புரட்டி எடுத்துருக்காங்க வீரலட்சுமி. எதுக்காக இப்படி பேசுனாங்க அப்படிங்கிறத இந்த பதிவில் படிக்க்கலாம்..
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது சம்மந்தமா கோவை சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், சவுக்கு சங்கர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனியில் பதுங்கி இருந்த சவுக்கு சங்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் மீது இதற்கு முன்னரே கஞ்சா உட்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது..
அடாவடியா பேசிட்டு வந்த சவுக்கு சங்கர் இப்போ கோவை மத்திய சிறையில அடைக்கப்பட்டிருக்காரு. இந்த ஒரு நிலையில, அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லாம பெண் போலீஸார பத்தியும், ஏடிஜிபி அருண் பத்தியும் தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், சவுக்கு சங்கரோட பேட்டிய வெளியிட்ட தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸ கைது செய்யக் கோரியும் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிச்சிருக்காரு.
சவுக்கு சங்கரை கிழித்த வீரலட்சுமி :
அதுக்கப்புறம் செய்தியாளர்களை சந்திச்ச வீரலெட்சுமி என்ன சொன்னாருன்னா, தமிழ்நாட்டில பல நூற்றாண்டு காலமா பெண்கள் முன்னேற முடியாம, தங்களோட கனவுகள கனவாகவே மாற்றி வீட்டுக்குள முடங்கி கிடந்தாங்க. இப்போதா பெண்கள் எல்லா துறைகளுக்கு வர தொடங்கி இருக்காங்க.
ஆனா, இப்போ மீண்டும் பெண் சமூகத்தை கேவலமா சிலர் பேசி வராங்க. நான் சவுக்கு சங்கரை பாத்து கேக்குறே. நீயும் ஒரு தாய் வயித்துல தானே பொறந்திருப்ப..?
நீயும் ஒரு பெண்னோட கருவில இருந்து தானே வந்திருப்ப..? உன் வீட்டிலேயும் அக்கா தங்கச்சி இருப்பாங்கல. அதை யோசிச்சு பார்க்காம மத்த பெண்களை பற்றி நீ பேசிருக்க அப்படின்னு கடுமையா விளாசிருக்காங்க.
சவுக்கு சங்கர் முதல்ல லஞ்ச ஒழிப்புத் துறையில் தான வேலை பார்த்தாரு. அவர ஏன் வேலையில இருந்து தூக்குனாங்கன்னு தெரியுமா..? ஒரு பெண்ண பாலியல் ரீதியா சீண்டியதுனால தான் பணிநீக்கம் செய்யப்பட்டாரு.
மத்தபடி அவர் ஒன்றும் தியாகம் பண்ணிட்டோ, லஞ்ச ஒழிப்புத் துறையில இருந்த லஞ்சத்த எல்லா ஒழிச்சிட்டோ வரல. பெண்கிட்ட தவறா நடந்து கிட்டதுக்காக பணி நீக்கம் செய்யப்பட்டவரு தான் சவுக்கு சங்கர்.
அப்படிப்பட்ட நீ இப்போ சமூக ஆர்வலர் என்ற பெயரிலும், பத்திரிகையாளர் என்ற பெயரிலும் ஒரு யூடியூபை ஆரம்பிச்சிட்டு, அதில ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிட்டு இருக்கன்னு புரட்டி எடுத்துருக்காங்க.
அதுமட்டும் இல்லாம பெண் போலீஸார பற்றி தவறா பேசுன சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுக்காரு, ஆனா சவுக்கு சங்கர் சொன்னத தனது யூடியூபில வெளியிட்ட தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸை ஏன் இன்னும் கைது செய்யலன்னும் கேள்வி எழுப்பியிருக்காரு.
ஒரு அரசாங்கத்த விமர்சிக்கணும்னா நேரடியாக பேசு. ஒரு ஆம்பளைய பற்றி பேசு. நீ மீசை வெச்ச ஆம்பள தான.. ஆம்பள டூ ஆம்பள பேசு. ஆம்பள டூ ஆம்பள தான் மோதணும். எதுக்கு இடையில் பெண்களை பத்தி நீ பேசுற? அப்படின்னு தன்னோட ஆதங்கத்த வெளிப்படுத்திருக்காங்க வீரலெட்சுமி…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..