நாய்க்கு பெயில்..!! மனிதனுக்கு ஜெயிலா..? இது என்ன புது சட்டம்..?
தமிழ்நாட்டில் மட்டும் பல வருடங்களாகவே நாய்க்கடி சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.., வளர்ப்பு நாய்கள் மட்டுமின்றி இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கை 6 கோடி இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது.
இந்நிலையில் நேற்றைய முன்தினம் ஆயிரம்விளக்கு பள்ளி சாலையில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை இரண்டு ராட்வெய்லர் நாய்கள் சிறுமியை கடித்து குதறியுள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம் பக்கத்தினர் நாயை விரட்டி சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சிறுமியின் இந்த நிலைக்கு காரணமான நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி மற்றும் மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆயிரம்விளக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..
சிறுமி மருத்துவனமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.., இந்நிலையில் சிறுமியின் இந்த அவல நிலைக்கு காரணமான 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்..
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு :
இந்தியாவில் வெறிநாய் கடி மூலமாக வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், 80 லட்சம் பேர் நாய்க்கடியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதாகவும்.., புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. மேலும் 8 கோடியே 20 ஆயிரம் ரூபாய் வரை நாய்க்கடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..
நாய்க்கடி மற்றும் ரேபிஸ் நோய் பாதிப்பு (Rabies) உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக 1,000 கோடி ரூபாய் வரை விலங்குகள் நல வாரியம் செலவிட்டு இருப்பதாகவும் அபாயகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு :
இனி வரும் நாட்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைப்படுத்தி, பரிசோதித்து அவற்றிக்கு நோய்கள் ஏதும் இல்லை என அறிந்த பிறகு தான் வளர்க்க அனுமதிக்கப்படும் என விலங்குங்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய நாய் இனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே சமயம், வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்தால் தான், உள்நாட்டு நாய் இனங்களைக் காக்க முடியும் என அறிவிக்கப்பட வேண்டிய தேவைகள் இல்லை.
மேலும், வர்த்தக ரீதியில் நாய்கள் இறக்குமதி செய்வதை முறைப்படுத்தலாம் எனக் கூறி, வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் போயர் போயல், மத்திய ஆசிய ஷெப்பர்டு, காகாசியன் ஷெப்பர்டு,
தெற்கு ஆசிய ஷெப்பர்டு, டோர்ன்ஜாக், சர்பிளானினாக், ஜப்பானிய அகிடா, மாஸ்டிப்ஸ், ராட்வெய்லர், பிட்புல், டெர்ரியர்ஸ், ரோடிசியன், உல்ப் டாக், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்டு,
கேன் கார்சோ உள்ளிட்ட நாய் இனங்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..