நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆனுகளாக கொரோனாவால் அவதிப்பட்டு வந்த மக்கள் இந்தாண்டு தீபாவளியை உற்சாகத்துடன் வரவேற்தனர்.
தமிழகத்தில் உச்சநீதிமன்ற அறிவிப்பின் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதன் படி 2 மணி நேரம் மட்டுமே அனுமதி பட்டாசுகள் வெடிக்க பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.இதை மீறும் பட்சத்தில் சட்டரீதியாக வழக்கு பதிக்கபடும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் மட்டும் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழகம் முழுவதும் 280 விபத்துகளும் நிகழ்ந்துள்ளது.
ராக்கெட் பட்ட்டாசு மூலமே அதிக படியான விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதன் மூலம் தீ காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த ஆண்டு பட்டாசு விபத்தால் உயிர் சேதங்கள் நிகழவில்லை என்று கூறப்பட்டுள்ளது.