ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவீர்களா..? மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்..!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று தான் கூறியதாகவும் தன்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்ததாகவும் ஆனால் தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இதுதான் கூட்டாட்சியா? ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..