ஞாயிற்று கிழமை சூரிய பகவான் வழிபாடு..!!
ஞாயிற்று கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரிய உதயத்திற்கு முன்பு வீட்டில் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். பின் சூரிய உதயம் ஆனதும் சூரிய பகவானை நோக்கி இருகைகள் கூப்பி இறை வணக்கம் செய்ய வேண்டும்.

சூரிய பகவானை வணங்கும் பொழுது மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். மனதில் உள்ள கவலைகள்., வீட்டில் உள்ள பிரச்சனைகள் நினைத்து சூரிய பகவானை நினைத்து வேண்ட வேண்டும். முக்கியமாக இந்த சூரிய பகவான் வழிபாட்டை ஆண்கள் செய்யலாம்.

தொடர்ந்து ஞாயிற்று கிழமை தோறும் சூரியபகவான் வழிபாடு செய்து வந்தால் கிரக தோஷங்கள் நீங்கி விடும். வீட்டு வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து சூரிய பகவானை வேண்டிக்கொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மேலும் வீட்டில் சுபிட்சமும் மன நிம்மதியும் இருக்கும்.. கிரக தோஷங்கள் இருப்பவர்கள் ஞாயிற்று கிழமை அன்று கோவிலுக்கு சென்று.., நவ கிரங்களில் முதல்வரான சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால்.., தோஷங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்..
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்

















