23 வயதிற்கு உட்பட்டோர்களுக்கான உலக மல்யுத்த சாம்பிடன்ஷிப் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக, சஜன் பன்வாலா களம் கண்டார்.
பன்வாலா தனது முதல் சுற்றில் லிதுவேனியாவின் ஆஸ்டிஸ் லியாகுக்மினாஸுக்கு எதிராக வெற்றி பெற்று தனது போட்டியைத் தொடங்கினார். இத்தொடரில் இந்தியா வீரர் சஜன் பன்வாலா 77 கிலோ எடைப்பிரிவின் கிரேகோ ரோமன் பிரிவில் நாட்டிற்காக வெண்கலம் வென்று வரலாறு படைத்தார் .
77 கிலோ எடைப்பிரிவின் கிரேகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் முதல்முறையாக பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 30 மல்யுத்த வீரர்களில் 21 பேர் போட்டிக்கான விசாவை இழந்ததை அடுத்து, ஸ்பெயினில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்தியக் குழு வெகுவாகக் குறைக்கப்பட்டது.
Discussion about this post