இந்திய சினிமாவில் முன்னணி நடிகரான மோகன்லால் நடித்த மான்ஸ்டர் திரைபடம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. 2016ல் மோகன்லாலை வைத்து புலிமுருகன் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் வைசாக்குடன் மீண்டும் இணைந்து மாஸ்டரில் மோகன்லால் நடித்துள்ளார். இந்த படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள இந்நிலையில், மாஸ்டர் படத்தை அரபு நாடுகளில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ஓரினசேர்கையை மையமாக கொண்டு காட்சிகள் அமைக்கபட்டுள்ளதால் அரபு நாடுகளில் அப்படத்திற்கு தடை விதிக்கபட்டுள்ளதாக தெரிகிறது. மோகன்லாலும் ஒரு பேட்டியில் மாஸ்டர் படம் குறித்து கூறுகையில்,இது ஒரு துணிச்சலான முதல் முயற்சி என கூறியிருந்தார். அவர் இதை பற்றித்தான் கூறினாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் மறு சென்ஸார் செய்து படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.