உத்தரபிரதேசத்தில் பாடன் மாவட்டத்தில் சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் மம்தா( 43 வயது )இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உண்டு. இவர்களுடைய மூத்த மகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு , சைலேந்திரா (46) என்பவரின் மகனுடன் திருமணம் நடந்தது. சுனில்குமார் டிரக் டிரைவர் . இதனால், அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
இந்த சமயத்தில் சம்மந்தி சைலேந்திராவுக்கு மம்தாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. தன்னுடைய கணவர் சுனில் குமார் வீட்டில் இல்லாதபோது, சம்மந்தியை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருப்பதை மம்தா வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். கடந்த 3 வருட காலமாக இந்த கூத்து நடந்துள்ளது.
இந்த நிலையில், இப்போது மம்தா, தன்னுடைய சம்மந்தியுடன் வீட்டை விட்டே ஓடிப்போய்விட்டாராம். வீட்டில் மனைவியை காணாமல் அதிர்ச்சியடைந்த சுனில் குமார், போலீசில் புகார் அளித்ததார். பணம்., நகையுடன் மம்தா மாயமானதாக புகாரில் சொல்லப்பட்டுள்ளது. போலீசாரும், இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் கடந்த வாரத்தில் மகளுக்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளையுடன் மாமியார் ஓடிப்போன சம்பவம் நடந்தது. தற்போது, அதை மிஞ்சும் வகையில் மகளின் மாமானாருடன் ஓடியிருக்கிறார் மம்தா.‘
என்னத்த சொல்ல போங்க!‘