போதை மாத்திரை விற்பனை செய்த பெண் கைது..
மாத்திரை என்ற பெயரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து, பலரையும் அடிமையாக்க வைத்த நான்கு பேரை சில தினங்களுக்கு முன்பு கொடுங்கையூர் காவலர்கள் கைது செய்துள்ளனர், அவர்களிடம் செய்த விசாரணையில்.
கடந்த ஜுன் 2ம் தேதி வலி நிவாரணி என்ற மாத்திரைகள் கொரியர் மூலம் வடமாநிலத்த கும்பல் வரவழைத்துள்ளது. வரவழைக்கப்பட்ட மாத்திரையை பல்வேறு பகுதியில் போதைக்காக விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பாக ரஞ்சித்குமார் (வயது – 27), அருண் ( வயது – 25), அருள் ராஜ் ( வயது – 23), அமுதவள்ளி ( வயது -25) என்ற நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் விசாரணை செய்துள்ளனர்.
அதன் பெயரில் உசேன் பீ என்ற (23 வயது ) பெண் தான் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. ஆனால் உசேன்பீ தலைமறைவாகி இருக்கிறார். தீவிர தேடலுக்கு பின்னர். கொடுங்கையூர் காவலர்களால் நேற்று முன்தினம் எழில்நகரில் உசேன்பீ கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட உசேன்பீயிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Discussion about this post