அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி..? மாகாணங்கள் எடுத்த முடிவு…!!
அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று நடைபெறவுள்ளது., குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.,
கடந்த 5 மாதங்களாக இத்தேர்தலுக்காக இருவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்., இந்நிலையில் இத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என அமெரிக்க ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளது., அதில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை விட., ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என ஒரு தெரிவித்துள்ளது.
கமலா ஹாரிஸ் முதன் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது ஆதரவில் மிகவும் பின்தங்கியிருந்த நிலையில், பிரசாரங்களுக்கு பின் ஆதரவு அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது டிரம்ப்பை எதிர்த்து., தற்போதைய அதிபர் ஜோ பைடன் களம் இறங்கினார்., ஆனால் அதன் பின் தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக ஜூலை 21-ம் தேதி பிரத்யேக தகவலை வெளியிட்டு இருந்தார்.. அதன் பின்னர் கமலா ஹரிஷ் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியானது..
அப்போதைய கருத்து கணிப்பில் அதாவது ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில்., டிரம்புக்கு ஆதரவாக 45 சதவீத ஆதரவும்., கமலா ஹரிஷுக்கு 43 சதவித ஆதரவும் கிடைத்தது.,
அதன்பின் கமலா ஹாரிஸுக்கு படிப்படியாக ஆதரவு பெருகி., தற்போது கமலா ஹாரிஸுக்கு 48 சதவீதம், டொனால்டு டிரம்புக்கு 41 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளதாக அமெரிக்க கருத்து கணிப்பு சொல்லுகிறது..
அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட மாகாணங்கள், குறிப்பிட்ட கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கும் நிலையில், 7 மாகாணங்களில் மட்டும் மக்கள் மாறி மாறி வாக்களிப்பார்கள். இந்த மாகாணங்களே புதிய அதிபரை தேர்வுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளன. இவற்றில் வேட்பாளர்களுக்கான ஆதரவு நிலை எப்போதும் மாறி இருக்கும் என்பது குறிப்பிடதக்கது..
மேலும் அமெரிக்காவின் அரிசோனா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மாகாணங்களில் டிரம்புக்கு 49 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் ஹாரிஸுக்கு 49 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர். நெவேடா, பெல்சில்வேனியா மாகாணங்களில் இருவருக்கும் 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகிறது…