வரும் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக தவெக போட்டியிடுகிறது. முதல் முறை போட்டியிடுவதால், தேர்தல் ஆணையமே சின்னத்தை ஒதுக்கும். மொத்தம் 190 சின்னங்களில் இருந்து தவெகவுக்கு சின்னம் ஒதுக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், இளைஞர்களிடத்தில் பரிச்சமாக இருக்கும் சின்னங்களை பெற தவெக விரும்புவதாக தெரிகிறது. அதன்படி, பிகில் படத்தில் கால்பந்து கோச்சாக விஜய் நடித்திருப்பார்.
அதனால், விசில் சின்னத்தை பெற தவெக விரும்புவதாக தெரிகிறது. அடுத்தது, கிரிக்கெட் பேட். இது இளைஞர்களிடத்தில் வெகு பிரலமானது. மைக்ரோபோனும் இளைஞர்களிடத்தில் வெகு பிரபலம். மைக்ரோ போன் இல்லாத இளைஞர்களை பார்க்க முடியாது. எனவே, இத்தகைய சின்னங்களுக்கு தவெக முக்கியத்தும் கொடுத்திருப்பதாக தெரிகிறது.
தற்போது ஆட்சி நடத்தி வரும் திமுக அரசு அடுத்த மே மாதம் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. நடப்பு அரசின் ஆட்சி முடிவதற்கு 6 மாதத்துக்கு முன்னதாக அங்கீகாரமில்லாத கட்சிகள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, வரும் நவம்பர் 5ம் தேதி முதல் சின்னம் கேட்டு கட்சிகள் விண்ணப்பிக்க நேரம் உள்ளது.