வடசென்னை 2 வருமா..? ஆண்ட்ரியா கொடுத்த அப்டேட்..!
கடந்த 2018ஆம் ஆண்டு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான திரைப்படம் வடசென்னை. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகிய இந்த படத்தில் சமூத்திரகனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ,அமீர் என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
வசூலிலும் சாதனை புரிந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் உருவாகும் ஏற்கனவே முதல் பாகத்தின் போதே அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் இதன் இரண்டாம் பாகத்திற்காக எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றன. ஆனால் இருவரும் வேவ்வேறு படங்களில் கமிட் ஆகி இருப்பதால் இந்த படம் தொடர்பாக எந்த அப்டேட்டும் கிடைக்காமல் இருந்து வருகிறது.
ஆண்ரியா பேட்டி :
இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதபாத்திரமும் மிரட்டலாக இருந்தது என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஆண்டிரியாவின் சந்திரா கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா வடசென்னை 2 குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
சந்திரா கதாபாத்திரத்தில் நான் தான்:
புதுச்சேரி நகை கடை ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் வடசென்னை 2 குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் “வடசென்னை 2 எடுப்பார்களா? இல்லையா? என்ற கேள்வி வெற்றிமறானிடம் தான் கேட்க வேண்டும்”. அப்படி வடசென்னை 2பாகம் எடுத்தால் நிச்சயம் சந்திரா கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன் என்பது எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்’. இதை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-பவானி கார்த்திக்