திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை..!
திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் டிக்கெட் எடுத்தும் நீண்ட நேரம் லைனில் காத்திருந்து பின் சாமி தரிசனம் செய்கின்றனர்.. இனி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன் இருந்தால் போதும் என்றும் அதுவரை திருப்பதியை சுற்றியுள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது..
திருப்பதியில் இன்று காலை தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ் தலைமையில் பக்தர்களின் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.., அப்போது பக்தர்களின் குறைகளை கேட்டறிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.,
சாதாரண பக்தர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் கடந்த ஒரு வாரத்தில் 1.05 லட்சம் பக்தர்களுக்கு சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. அது தற்போது 1.47 லட்சமாக அதிகரித்துள்ளது. வாணி அறக்கட்டளை சார்பில் தரிசனம் டிக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 1000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதில் 100 டிக்கெட்டுகள் திருப்பதி விமான நிலையம் வழியாக வரும் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது..
இந்த டிக்கெட்டுகள் மூலம் திருமலைக்கு பக்தர்கள் தரிசனம் செய்யும் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு வந்தால் மட்டும் போதும். அதுவரை திருப்பதி நகரிலும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்வேறு திருத்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்துக்கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. அன்று தொடங்கி அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.. என சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஏழுமலையானை 22.13 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதில் 8.67 லட்சம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.. கடந்த கடந்த மாதத்தில் மட்டும் உண்டியலில் காணிக்கையாக 125.35 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது..
ஒவ்வொரு ஆண்டு ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் கடைசி நாள் அன்று.. அங்குள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். அந்த தீர்த்தவாரி நடந்து முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் நீராடுவது வழக்கம்.
இந்த ஆண்டு குளத்தின் தூய்மை பணிகள் நாளை தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை குளத்தை தூய்மைப்படுத்துதல், குளத்தில் உள்ள சேற்றை அகற்றுதல், குழாய்களுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இன்னும் ஒரு மாதத்திற்கு கோயில் தெப்பக்குளம் மூடப்படுவதால். தேவஸ்தானம் வரும் பக்தர்கள் குளிக்க இந்த முறை அனுமதி இல்லை என்று தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..