இந்தியாவில் கார்களின் விலைகளும் உயர போவதாக பிரபல நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாக அறிவிப்பு.
இந்தியாவில் பல உற்பத்தி பொருட்களின் விலைவாசி உயர்ந்து வருவதால் மக்கள் பெரும் அவதிபட்டு வரும் நிலையில், இந்தியாவின் கார் உற்பத்தியில் பிரபலமான நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் விலைகளை உயர்த்த உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் புதிதாக கார் வாங்க இருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் அறிவிப்பில். கார்களின் உற்பத்தி விலை அதிகரித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வாடிக்கையாளர்களின் நல்கருதி முடிந்த அளவுக்கு கார்களின் விலையை குறைக்க முயற்ச்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை ஏற்றம் நடவடிக்கை அடுத்த ஆண்டு அதாவது வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.