மீண்டும் இயக்கப்படுமா ஆம்னி பேருந்து..? வெளியான தமிழக அரசின் முடிவு..
அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம் போல இயங்கும்.., பேருந்து இயங்காது.., புக்கிங் செய்த டிக்கெட் என்னாகுமோ என மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது..,
நேற்று வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.., இதனால் பேருந்துகள் இயங்காது மக்கள் பாதி வழியிலேயே இறக்கி விடபடுவார்கள் என சில தகவல்கள் வெளியானது..
இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.., பின் இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் மாறன் மதிமுகமிற்கு பேட்டி அளித்துள்ளார்..
தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் மாறன் பேட்டி :
தமிழ்நாட்டில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளில் 90% பேருந்து எங்கள் நிறுவனத்தை சேர்ந்த பேருந்துகள் தான்.., எனவே தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல இயங்கும்..,
வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்து உரிமையாளர்கள் மட்டுமே ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருவதால்.., வெளிமாநிலத்தில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கிறது.. விரைவில் அந்த பேருந்துகளும் இயக்கப்படும் என அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்..
இதை படிக்க மறக்காதிங்க : பேருந்துகள் இயங்காமல் நிறுத்தப் பட்டதற்கான உண்மை காரணம்..,
Discussion about this post