கொடைக்கானலில் வனவிலங்குகளின் அட்டகாசம்..! விவசாயிகள் வேதனை..! கோட்டாட்சியர் ராஜாவின் முடிவு .?
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது . வனவிலங்குகளால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேல் மலைப் பகுதிகளில் காட்டுப்பன்றியும், கீழ் மலைப் பகுதிகளில் யானை மற்றும் காட்டெருமைகளால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேல்மலை கவுஞ்சி பகுதியை அடுத்த அறம்பளை பாறை அணை உடைந்த போது பாதிக்கப்பட்ட விவசாய விளை பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரியும், தனது நிலத்தை சீர் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர் மேலும் விவசாயிகளின் குறைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கோட்டாட்சியர் ராஜா தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..