மருத்துவர் பரிந்துரையில்லாமல் நோயாளிகளுக்கு வேறு மாத்திரை வழங்கிய அரசு மருத்துவமனை..! மக்களே உஷார்..!
ஆத்தூர் அருகே கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் மாத்திரை பற்றாக்குறையால் மருத்துவர் பரிந்துரையில்லாமல் நோயாளிகளுக்கு வேறு மாத்திரைகளை வழங்கியதால் திமுக, கவுன்சிலர் மருத்துவருடன் வாக்குவாதம்,
நோயாளிகளுக்கு பெண் துப்புரவு பணியாளர் தோல் மருத்துப்போவதற்கு ஊசி போட்டு தையல் போடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு உள்ளூர் மட்டுமின்றி கிராம பகுதிகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள் நோயாளியாகவும் புற நோயாளியாகவும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவர் உள்பட ஆறு மருத்துவர்கள் ஒன்பது செவிலியர்கள், தற்காலிக தூய்மை பணியாளர்கள் மூன்று பேர் உள்பட 23 பேர் பணியாற்றி வருகின்றனர், இன்னிலையில் மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் மருந்தகத்தில் பயிற்சி பணியாளர் ஒருவரும் பணியாற்றி வருகின்றனர்,
இதனிடையே கெங்கவல்லி பேரூராட்சி 4 வது வார்டு திமுக, கவுன்சிலரும், விளையாட்டு மேம்பாட்டு அணியின் சேலம் கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளருமான தங்கபாண்டியன் இவர் பிஎச்டி யோகா படிப்பை முடித்துள்ளார், இவர் தனது உறவினரான கிருஷ்ணமூர்த்தியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார், அங்கு அவருக்கு மருத்துவர் கவியரசன் சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைக்கான சீட்டை வழங்கியுள்ளனர்.
மருந்து சீட்டை எடுத்து கொண்டு மருந்தகத்தில் மாத்திரை வாங்க சென்றுள்ளார், அப்போது மருத்துவர் பரிந்துரைத்த டைக்னோ பினாக், ரேனிட்டிலின், உள்ளிட்ட மாத்திரை வழங்காமல் மருந்தகத்தில் பணியாற்றி வரும் பயிற்சி பணியாளர் சிவனேசன் எம்டிஎஸ், மாத்திரையை வழங்கியுள்ளார்,
அதிர்ச்சியடைந்த தங்கபாண்டியன் மருத்துவர் பரிந்துரை செய்த மாத்திரைகளை வழங்காமல் வேறு மாத்திரைகளை வழங்குகிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் கவியரசு கவுன்சிலர் தங்கபாண்டியனிடம் மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளதால் தான் எம்டிஎஸ் மாத்திரையை வழங்கியுள்ளார். என தெரிவித்ததால் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இந்த மாத்திரை சைடெபக்ட் ஏதும் வராது என்றம் தெரிவித்தார்.
இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தியை கட்டு கட்டும் அறைக்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கும் செவிலியர்கள் படுகாயம் அடைந்தவருக்கு தையல் போடாமல் தற்காலிக பெண் தூய்மை பணியாளர் நளினி என்பவர் அடிப்பட்ட இடத்தில் தோல் மருத்துப்போக ஊசி போட்டதோடு அவரே நோயாளிக்கு தையல் போட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்,
Discussion about this post